28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்; ரோஹித் சர்மா 2ஆம் இடம்

சர்வதேச T20 கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மோசமான சாதனை படைத்துள்ளார்.

அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் 2ஆவது இடத்தில் தற்போது அவர் உள்ளார்.

36 வயதான ரோஹித் சர்மா கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

இதுவரை 150 டி20 போட்டிகளில் விளையாடி 3,853 ஓட்டங்களை குவித்துள்ளார். 4 சதங்கள் மற்றும் 29 அரைசதங்கள் இதில் அடங்கும். அதிக சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரராகவும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் 12 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதன் மூலம் சர்வதேச T20 கிரிக்கெட்டில் டக் அவுட் ஆன வீரர்களில் ஆவது இடத்தில் உள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles