சவுதி அரேபியாவின் மந்திரி சபையை மாற்றியமைக்கும் அரசாணையை சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராகவும், இளவரசர் காலித் பின் சல்மான் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இளவரசர் துர்கி பின் முகமது பின் ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் மாநில அமைச்சராகவும், இளவரசர் அப்துல் அஜிஸ் பின் துர்கி பின் பைசல் விளையாட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கல்வி அமைச்சராக யூசுப் அல் பென் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.