Home வெளிநாட்டு சவுதி அரேபியாவில் முதல் மதுபானக்கடை திறப்பு

சவுதி அரேபியாவில் முதல் மதுபானக்கடை திறப்பு

0
சவுதி அரேபியாவில் முதல் மதுபானக்கடை திறப்பு

மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த சவுதி அரேபியாவில், முதல் முதலாக மதுபானக்கடையை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்துள்ளார்.

சவுதி அரேபிய நாட்டின் ரியாத் நகரத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடையொன்று விரைவில் திறக்கப்படள்ளது.  இவர்கள் மது பெற வேண்டும் என்றால் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி குறியீடு பெற்று,’மொபைல் செயலி’ மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே உள்ளனர். கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் சவுதி அரேபியாவில் மதுபானம் கடை மூலம் விற்கப்படுவது இதுவே முதல்முறை. சவுதிஅரேபியா நாட்டில் முதல் மதுபான கடை திறக்கப்படுவதன் மூலம் இஸ்லாமிய சட்ட கோட்பாட்டில் இருந்து விலகி செல்கிறாரா இளவரசர் முகமதுபின் சல்மான் என கேள்வி எழுந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here