சவுதி அரேபியாவில் ரயில் ஓட்டுநர் பணிக்கு
28,000 பெண்கள் விண்ணப்பம்

0
121

சவுதி அரேபியாவில் பெண் ரயில் ஓட்டுநருக்கான 30 காலி பணியிடங்களுக்கு 28,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றதாக, ரயில் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு புனித நகரங்களான மெக்கா மற்றும் மெதினாவுக்கு இடையே அதிவேக ரயில்களை இயக்க வேண்டும்.
பழமைவாத முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் இத்தகைய பணிகளுக்கு, பெண்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.