சவூதி அரேபியாவில் ரியூனியாவின் அமைச்சர் பதவி நீக்கம்!

0
83

ஹஜ் யாத்திரீகர்கள் உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து ரியூனிஷியாவின் சமய அலுவல்கள் அமைச்சர் இப்ராஹிம் சாய்பீ பதவி நீக்கப்பட்டுள்ளார்.ரியூனிஷியாவின் ஜனாதிபதி கைஸ் சையத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஹஜ் யாத்திரையின் போது சவூதி அரேபியாவின் மெக்காவில் நிலவிய அதிகூடிய வெப்ப அனர்த்தத்தால் ரியூனிஷியப் பிரஜைகள் 49 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சவூதி அரேபியாவின் மெக்காவில் நிலவிய அதிகூடிய வெப்ப அனர்த்தத்தால் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரழந்ததுடன் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.