தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவியான அப்துல் காதர் பாதிமா ஹாதியா உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல்களில் சாய்ந்தமருது வெடிப்பைத் தொடர்ந்து சஹ்ரானின் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தடுப்பு உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
18 மாதங்கள் தடுப்பு உத்தரவின் பேரில் இருந்த குறித்த சந்தேகநபர் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றில் முற்படுத்த பின்னர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.
சஹ்ரானின் மனைவி நேற்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார். எவ்வாறாயினும் அங்கு அவர் சாட்சியம் பெற்றுக் கொடுக்கவில்லை. சஹ்ரான் ஹசீமின் மனையிடம் சாட்சி பெற்றுக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்றையதினம் பெற்றுக் கொடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.