க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் பிற்போடப்படுமென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாதாரண தரப் பரீட்சைகளும் ஒன்றரை மாத கால அளவில் நிச்சயமாகப் பிற்போடப்படும். உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அடுத்த வாரம் உத்தியோபூர்வமாக அறிவிப்பார் ” என அவர் மேலும் தெரிவித்தார்.