28 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சாதாரண தரப் பரீட்சையில் தோல்விகள் ஏற்படாது 

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தோல்விகள் ஏற்படாதென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை அவர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி அல்லது தொழில் பயிற்சியை பின்பற்றும் அனைத்து மாணவர்களும் கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் வரை கல்வி கற்க அமைச்சு அனுமதியளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, குழந்தைகள் தங்கள் பள்ளிகளை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லையெனவும் அவர்களின் கல்வி அல்லது தொழில் பயிற்சியுடன் மேலும் இரண்டு ஆண்டுகள் கல்வியை தொடரலாமெனவும் பின்னர் அவர்கள் தொழில் பயிற்சி திட்டங்களுக்கு அனுப்பப்படுவார்களெனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.மேலும் பெரும்பாலான திட்டங்களை அவர் புதுப்பித்துள்ளதுடன் மொத்தம் 4.3 மில்லியன் மாணவர்கள் தற்போது 10,126 அரசுப் பள்ளிகளிலும், 300 இற்கும் மேற்பட்ட சர்வதேசப் பள்ளிகளிலும் 110 இற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிலும் படித்து வருதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்தோடு கல்வியை மாற்றும் பணியில் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் கடந்த 75 ஆண்டுகளாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றியதையடுத்து பிரிட்டனில் கூட அந்த பாடத்திட்டம் காணப்படவில்லையெனவும் அவர்கள் தங்கள் வழிமுறைகளை கடுமையாக உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் நாட்டில் கல்வியை மாற்றுவதற்காக பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வியில் இருந்து நடைமுறைக்கு மாறுவதற்கு அல்லது தொகுதிகளை அறிமுகப்படுத்துவதற்கு விரும்புவதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles