30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்கு தடை

2023 (2024) க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கு தோற்றுபவர்களை இலக்காகக் கொண்டு அல்லது தனியார் வகுப்பு அல்லது பயிற்சி வகுப்புகளை நடத்துவது இன்றிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே 6 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரை பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 3,527 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறும்.

387,648 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 452,679 பரீட்சார்த்திகள் பரீட்சைகளுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக் கைதிகளுக்காக பரீட்சை நிலையமொன்றும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் வசித்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான பரீட்வை நிலையத்துடன் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வுகளின் நிறைவு நாளான ஜூன் 1ம் திகதி வரை, பாடம் சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் அல்லது வகுப்புகள் நடத்துவது, தேர்வு சார்ந்த தாள்களை அச்சிடுவது, மின்னணு ஊடகங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மூலம் விளம்பரம் செய்வது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாணவர்களும் எளிதாக தேர்வெழுதும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் தயார் செய்து பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து முடித்துள்ளது. இன்னும் சில தினங்களில் வினாத்தாள்கள் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் அதிபர் தெரிவித்துள்ளார்.

“ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் இந்த விதிமுறைகளை மீறினால், அருகிலுள்ள பொலிஸ் நிலையம், தேர்வுகள் திணைக்களம் அல்லது பின்வரும் அதிகாரிகளுக்கு முறைப்பாடு அளிக்கலாம்,” என்று அவர் கூறினார்.

பொலிஸ் தலைமையகம்: 0112421111

பொலிஸ் அவசரநிலை: 119

அவசர அழைப்பு (பரீட்சைகள் திணைக்களம்): 1911

பாடசாலை தேர்வுகள் அமைப்பின் கிளை: 0112784208 / 0112784537.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles