இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், விடுதலையான சாந்தனை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான பயண
ஆவணத்தை இந்திய மத்திய அமைச்சின் வெளிநாட்டவர்களுக்கான பிராந்திய பதிவு அதிகாரி வெளியிட்டுள்ளார்.
இதன்படி, தற்போது திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன், திருச்சியில் உள்ள விமான நிலையத்தின் ஊடாக நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
சாந்தனின் கோரிக்கைக்கு அமைய, தமிழகத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் அண்மையில் அவருக்கான பயண ஆவணத்தை வழங்கியிருந்தது.
இந்த நிலையில் மத்திய வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டவர்களுக்கான பிராந்திய பதிவு அதிகாரியும் சாந்தனுக்கான தற்காலிக பயண ஆவணத்தை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம் அவருக்கான பயணச்சீட்டு உறுதிப்படுத்தப்பட்டவுடன் அவர் நாடு கடத்தப்படுவார் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்
தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.