சாம்பியன் கிண்ண தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து அணி!

0
33

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணியிடம் ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது. 

தொடர்ந்து 326 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 317 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. 

இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் அணி சார்பில் 177 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த இப்ராஹிம் சத்ரான் (Ibrahim Zadran) போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். 

இதேவேளை, இந்த போட்டியில் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி சாம்பியன் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.