சாய்ந்தமருதில் ஜனாஸா நலன்புரி
அமைப்பு உருவாக்கம்

0
202

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்களின் நலன் கருதி ஜனாஸா நலன்புரி அமைப்பு சாய்ந்தமருது பதாஹ் பள்ளி வாசலில் பள்ளவாசலின் தலைவர் எம்.எம்.எம்.றபீக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேசத்தில் இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வறிய குடும்பங்களின் நலன்கருதி இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் எனப்பலரின் பங்களிப்புடன் இவ்வமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனஸாவைக் குளிப்பாட்டல் கபனிடல்;, ஜனாசாக்களைக் கொண்டு செல்லல் நல்லடக்கம் செய்தல் போன்ற சேவைகள் இவ் அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் என சாய்ந்தமருது பதாஹ் பள்ளி வாசலில் பள்ளவாசலின் தலைவர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மாப்பள்ளிகளின் பேஸ்இமாம் எம்.ஐ.ஆதம்பாவா ஏ.எம்.அன்சார் மௌலவி மற்றும் சமூக ஆர்வலர்கள் தனவந்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.