அம்பாறை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காரைதீவு 5ஆம் பிரிவு தம்பிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான ஆறுமுகம் வனிதா என்ற 53 வயதுடைய யுவதி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கல்முனை மாமாங்க வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிசார் மேலதிக விசாரனையை மேற்கொண்டுள்ளதுடன் காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.