சா/த மாணவனைத் தாக்கிய ஐவர் கைது

0
107

இவ்வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவனின் சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் வரும்படியாக அடிவயிற்றில் எட்டி உதைத்து கடுமையாக தாக்கிய சம்பவம்  தொடர்பில் பாடசாலை மாணவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரும் தாக்குதலுக்குள்ளான மாணவன் கல்வி கற்கும் அதே பாடசாலையில் பயிலும், இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (02) கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்களான குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவனின் சிறுநீர்பாதையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டாளரின் கோரிக்கைக்கு அமைய கைது செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


You May Als