சிங்கர் பினான்ஸ் தனது புதிய கிளையை அம்பாறை கல்முனை நகரில் இன்று திறந்துள்ளது

0
101

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான சிங்கர் பினான்ஸ் தனது புதிய கிளையை அம்பாறை கல்முனை நகரில் இன்று திறந்துள்ளது.
புதிதாக திறந்து வைக்கப்பட்ட சிங்கர் பினான்ஸ் இன் கிளையானது இல 110,112, பிரதான வீதி கல்முனையில் அமைந்துள்ளது .
சிங்கர் பினான்ஸ் ஆனது இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு கிளைகள் நாடு பூராகவும் இயங்கி வருவதுடன் இன்று கல்முனையில் 52 ஆவது கிளையினை ஆரம்பித்துள்ளது.
அதில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு கிளைகளுடன் கல்முனை கிளையானது 52 ஆவது கிளையாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் லீசிங், கடன்கள், நிலையான வைப்புக்கள், வணிகக் கடன்கள், வீட்டுக் கடன்கள், சேமிப்புக் கணக்குகள், தங்க கடன்கள், சிறுவர் சேமிப்பு போன்ற பல நிதி வசதிகள் இதன் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும்.
திறப்பு விழா நிகழ்விற்கு அதிதிகளாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் துஷான் அமர சூரிய, பிரதம செயற்பாட்டு உத்தியோகத்தர் இமான் பெரேரா, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.