சிங்களத் தலைவர்கள் திராணியற்றவர்கள்!- சி.சிறீதரன்

0
227

சிங்களத் தலைவர்கள் யாரும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க திராணியற்றவர்களாகவே இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேச சபைக்காக தமிழரசு கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வட்டாரம் -01, வட்டாரம் -02 வேட்பாளர்கள்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


நெடுந்தீவுக்கான பயணத்தை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கியுள்ளார் குறித்த கலந்துரையாடல்களில் நெடுந்தீவு பிரதேச சபைக்காக போட்டியிடும் தமிழரசு கட்சி வேட்பாளர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.