சினோபெக் நிறுவனம் விரைவில் இலங்கையில்!

0
80

உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சீனாவின் சினோபெக் நிறுவனம் ஜூன் மாதத்துக்குள் இலங்கையில் தனது நிலையத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளது என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.

சினோபெக் ஓவர்சீஸ் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்கின் அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதற்காக கொழும்பு வந்துள்ள நிலையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் அமைச்சர் காஞ்சன விஜயசேகரவுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ‘சினோபெக் நிர்வாகம், சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சினொபெக் நிறுவனம் திட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு ஜூன் மாதத்துக்குள் வேலையைத் தொடங்கவுள்ளனர்.

450 கோடி டொலர்கள் முதலீட்டில் உருவாகும் இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.