3 போட்டிகள் கொண்ட ரி – 20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சிம்பாவேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ரி – 20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் ரி – 20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ரி – 20 போட்டியில் சிம்பாவே அணியும், 2ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது போட்டி ஹராரேவில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே 19. 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 31 ஓட்டங்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும் விக்கெட்களை இழந்து திணறியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இறுதியில் 19. 3 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 128 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ரி – 20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.