பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது இளைஞன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மாத்தறை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் இருந்து குழுவொன்று இன்று அந்த இடத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தவறுதலாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால், முச்சக்கர வண்டியில் பயணித்த 15 வயது சிறுவன் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் காயமடைந்ததைத் தொடர்ந்து குறித்த பகுதியில் மக்கள் திரண்டதால் அங்கு பதற்றமான
சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பிரயோகம் நடத்திய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட அதேவேளை விசாரணை முடிவியும் வரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.