திருகோணமலை – ரொட்டவௌ, மிரிஸ்வௌ பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 6 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இரண்டு குழுக்களிடையில் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்ததுடன், அதனுடன் தொடர்புடையதாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் அனைவரும் 16 வயதிற்குட்பட்டவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான விசாரணைகளை மொரவௌ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.