மட்டக்களப்பு வம்பிவெட்டுவானில், சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வை வேல்ட் விஷன் நிறுவனத்தின் பங்காளி நிறுவனமான வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா நிறுவனம் முன்னெடுத்தது.
‘வாருங்கள ; தேசமாக ஒன்றிணைந்து சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் ‘ எனும் கருப்பொருளில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.
திட்ட இணைப்பாளர் அமுதராஜாவின் ஒழுங்கமைப்பில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.