மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா சிறையாத்தீவு எனும் இடத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களைத் தேடி தீடிர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்ட்டது.
முதலைக்குடா வடக்கு சிறையாத்தீவு எனும் இடத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடைபெற்று வருவதாக அங்குள்ள மக்களால் கொக்கட்டிச்சோலை இராணுவத்தினர் மற்றும் கிராம இளைஞர்களுக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்று கொக்கட்டிச்சோலை இராணுவமுகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரும், முதலைக்குடாகிராம இளைஞர்கள் சமுகஆர்வலர்கள் தோணி மூலம் சிறையாத்தீவுக்கு சென்று அங்கு சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களைத் தேடி சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது அங்கு எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டுகேஸ் சிலிண்டர்கள், 09 கசிப்புபரல்கள், இரண்டுபூலிகள் என்பன இராணுவத்தினராலும், இளைஞர்களாலும் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் பரல்களில் இருந்த கசிப்புக்கள் அவ் இடத்திலே அழிக்கப்பட்டன இச் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்பில் கொக்கட்டிச்சோலை இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.