சிவகார்த்திகேயனுடன் மீண்டும் சமந்தா!

0
253

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் , அயலான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும் , கமல்ஹாசன் தயாரிப்பிலும் நடிக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 22 வது படத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய இயக்குநர் மடோனி அஸ்வின் இயக்குகிறார்.

இதை வேல்ஸ் பிலிம் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு சமந்தா சிவகார்த்திகேயனுடன் இணைந்து சீமராஜா படத்தில் நடித்திருந்தார்.