சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்து!

0
14

கினிகத்ஹேன-நாவலப்பிட்டி பிரதான வீதியில் சிவனொளிபாதமலை யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று (26) விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனத்தில் பயணித்தவர்கள் விபத்தில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கினிகத்ஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாரதியின் கவனயின்மையே விபத்துக்குக் காரணம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.