சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவக்காலம் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, நாளை அதிகாலை பெல்மதுளை – கல்பொத்தவல ஸ்ரீபாத விகாரையில் இருந்து ஊர்வலமாக புனித நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகள் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிவனொளிப்பாதமலைக்கு யாத்திரை வருபவர்கள் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அதேநேரம் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வருடாந்தம் பருவக்கால நிறைவின் போது பெருந்தொகையான பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.