சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், குருணாகல், கம்பஹா, வரக்காப்பொல ஆகிய இடங்களில் இருந்து யாத்திரைக்குச் சென்ற 10 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸார் ஸ்டூவட் 1318 என்ற மோப்ப நாயின் உதவியுடன், கினிகத்தேனை தியகல ஊடாக, சிவனொளிபாத மலைக்குச் யாத்திரை சென்ற வாகனங்களை சோதனையிட்டபோதே, கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை எடுத்துச் சென்ற நபர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.