ஜனவரி 22-ஆம் தேதி சீனா ஓர் சட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி சீன கடல் எல்லையில் வெளிநாட்டவர்களது கப்பல்கள் உள்ளே நுழைந்தால் அவர்களை தாக்க சீன கடற்படை அதிகாரம் உண்டு என்று அறிவித்தது. இதனால் ஜப்பான் அதிருப்தி அடைந்தது.
சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள கடல் பரப்பில் ஜப்பான் கடல் படையினர், மீனவர்கள் உள்ளே நுழைந்தால் சீன கடற்படை அவர்களை விரட்ட கனரக ஆயுதங்களை பயன்படுத்த முடியும். இதற்கு ஜப்பான் வெளியுறவுத்துறை கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.சமீபகாலமாக அண்டை நாடுகளுடன் சீன கம்யூனிச அரசு அதிக மோதலில் ஈடுபட்டு வருவது தெரிந்த விஷயம். இதற்கு ஜப்பானும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே தென் சீன கடல் பகுதியில் தைவான்,
தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த சீன கடற்படை தற்போது இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து ஜப்பான் கடல் படையுடனும் மோதல் போக்கில் ஈடுபட வாய்ப்புள்ளது. சர்வதேச கடல் பரப்பு சட்டத்தை மதிக்காமல் சீனா இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக ஜப்பான் கேபினட் செயலாளர் கட்சுன்கோபா கேட்டோ குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஜப்பான் தனது கடல் பரப்பில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து உயர்மட்ட குழுக்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றை கடந்த புதனன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் சீனாவின் இந்த சர்ச்சைக்குரிய சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிழக்கு சீனக்கடலில் உள்ள சென் காகூ தீவு ஜப்பானுக்கு சொந்தமென்று ஜப்பான் யோஷிஹிடே சுகா அரசு கூறிவருகிறது. மனித நடமாட்டம் இல்லாத இந்தத் தீவு தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறி வருகிறது. மேலும் இத்தீவுக்கு டாயோ என்று பெயர் சூட்டியும் உள்ளது. இந்தத் தீவில் ஜப்பான் அரசு கட்டடங்கள் கட்டினாலும் இந்த தீவைச் சுற்றி ஜப்பான் கடற்படை கப்பல்கள் இருந்து வந்தாலும் சீனா கனரக துப்பாக்கிகள் கொண்டு அவர்களை தாக்கும்.
இதில் ஐநா தலையிட்டு இந்த பிரச்னைக்கு சுமூகத் தீர்வு கொண்டுவர வேண்டும் என்று ஜப்பான் விரும்புகிறது. ஆனால் அதற்கு சீனா கட்டப்படுமா என்று தெரியவில்லை. இவ்வாறாக தொடர்ந்து இந்தியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளுடன் சீனா எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டு ஆசிய நாடுகளை அச்சுறுத்திவருகிறது.