சீனாவில் கடும் புயல்; 800 விமான சேவைகள் இரத்து

0
7

சீனா தலைநகர் பீஜிங் மற்றும் வடக்கு பிராந்தியத்தை கடுமையான புயல் தாக்கியது. மங்கோலியாவில் இருந்து சீனா நோக்கி நகர்ந்த அந்த புயலால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. எனவே விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அங்கு 800க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக ரயில் மற்றும் வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.