சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்றுஅதிகாலை இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்பது வருடங்களில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு இது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.