சீனாவில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக சீனாவில் தினமும் இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தொற்றுநோய் தாக்கம் ஆரம்பித்ததிலpருந்து சீனாவில் தினசரி அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை மாத்திரம் சுமார் 31இ257 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாகஇ கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச தினசரி கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கு பின்னர் அதிகபட்ச தொற்றாளர்களின் எண்ணிக்கை 28இ000 ஐ தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் பெய்ஜிங் மற்றும் வணிக மையமான குவாங்சோ உட்பட பல முக்கிய நகரங்களில் கொவிட் தற்போது பாரியளவில் பரவி வருகிறது. தொற்றுநோய் பரவத் தொடங்கியதில் இருந்துஇ சீனாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படிஇ 5200 க்கும் மேற்பட்டோர் கொவிட் நோயால் உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. கொவிட் வைரஸைக் கட்டுப்படுத்த உலகளவில் பின்பற்றப்படும் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீனாஇ இந்தளவில் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்புஇ கொவிட் தொற்றுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்துவதற்கு சீனா அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.