சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜிலின் (Jilin) மாநிலத்தில் 4 அமெரிக்கக் கல்வியாளர்கள் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொதுப் பூங்காவில் அந்தத் தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்கப்பட்ட கல்வியாளர்கள் அயோவா (Iowa) மாநிலத்தின் Cornell பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனாவில் உள்ள Beihua பல்கலைக்கழகத்திற்குச் சென்ற அவர்களைச் சந்தேக நபர்கள் கத்தியால் குத்தியதாக CNN செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அயோவா ஆளுநர் கிம் ரேனல்ட்ஸ் (Kim Reynolds) தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு தெரிவித்துள்ளார்.
சீன அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.மேலும்
சீன ஊடகங்களிலும் அதுபற்றிய தகவலும் குறிப்பிடவில்லை.