சீன உளவுக் கப்பலின் வருகை இரத்து!

0
138

இலங்கை வரவுள்ள சீன உளவுக் கப்பலின் வருகையை இரத்துசெய்யுமாறு, சீனாவிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை வரவுள்ள சீன உளவுக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்குரமிட்டு தனது ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியிருந்தது.
எனினும் குறித்த கப்பல் வருகையால் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்தியா தனது எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தது.
இந்த நிலையில், சீனாவிலிருந்து குறித்த கப்பல் இலங்கையை நோக்கி புறப்பட்டுள்ள நிலையில், அதன் வருகையை ஒத்திவைக்குமாறு ஏற்கனவே இலங்கை அரசு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், தற்போது கப்பலின் வருகையை இரத்து செய்யக்கோரி இலங்கை அரசு கடிதம் அனுப்பியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.