சீன ஜனாதிபதி வீட்டுக் காவலில் உள்ளார் என்பது உண்மையா?

0
156

உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டிற்கு பிறகு சீன ஜனாதிபதி ஜின்பிங் மக்கள் கண் முன் தோன்றவில்லை.

அவர் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடு சென்று திரும்பும் ஒவ்வொருவரும் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்ற கொள்கை சீனாவில் உள்ளது.

அதன்படி, சீன ஜனாதிபதி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அடுத்த மாதம் 16ஆம் திகதி தொடங்க உள்ள கட்சியின் ஐந்தாண்டு மாநாட்டில் சக்திவாய்ந்த தலைவராக மீண்டும் வருவார் என நம்பப்படுகிறது.