சீன நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை உயர்வு!!

0
109

வடமேற்கு சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்நிலநடுக்கம் தென் சீனக்கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் உருவானதாக சீன வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதனால் சீனா, கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.

இந்நிலையில் பலி எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளதுடன், 980 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் வாயப்பு அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.