சீன பத்திரிகையாளருக்கு நான்காண்டுகள் சிறை

0
238

கொவிட்-19 பரவலின் ஆரம்ப காலக் கட்டத்தில் வுஹானுக்கு விஜயத்தை மேற்கொண்டு பல உண்மை தகவல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஜாங் ஜான்னுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ஜாங் ஜான், ஷாங்காய் நீதிமன்றில் ஒரு குறுகிய விசாரணையின் பின்னர் தண்டனை உறுதி செய்யப்பட்டதாக அவரது பாதுகாப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான ரென் குவானியு செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜாங் ஜான், வெடிப்பின் குழப்பமான ஆரம்ப கட்டங்களில் அறிக்கை செய்ததற்காக மோதல்கள் மற்றும் சிக்கலைத் தூண்டுவதற்கும் வழியமைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்காகக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீனாவை சேர்ந்த 37வயதான பத்திரிகையாளர் ஜாங் ஜான். முன்னாள் வழக்கறிஞரான இவர் சீனாவில் கொரோனா உருவான ஆரம்ப கட்டத்தில் அதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ள வுஹான் சென்றுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புகள், மக்கள் அனுபவிக்கும் துயரங்கள், சீன அரசின் மெத்தன போக்கு தொடர்பான பல்வேறு உண்மை சம்பவங்களை செய்தியாக வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய செய்திகளை எஸ்.எம்.எஸ், வீடியோ, வீசாட், டுவிட்டர், யூடியூப் மூலம் உலகம் முழுவதும் பரவ செய்தார். ஜாங் ஜான் போன்ற பல பத்திரிகையாளர் சீனாவில் இருந்து கொடுத்த தகவல்களின் அடிப்படையிலே சீனா அரசு மறைத்த கொரோனா உண்மை நிலவரத்தை உலக ஊடகங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.

உண்மையை மறைக்க நினைத்த சீனா தடையாக இருந்த பத்திரிகையாளர்களை கைது செய்தது. அவ்வாறு ஜாங் ஜான் கடந்த மே மாதம் சீன அரசால் கைதுசெய்யப்பட்டார்.

அரசு விதிக்கு மாறாக கொரோனா குறித்து செய்திகளை வெளியிட்டது, வெளி நாட்டு ஊடகங்களுக்கு வுஹானில் பரவிய வைரஸ் தொடர்பாக பேட்டி கொடுத்தது, தவறான தகவல் மூலம் மக்களியே வதந்தி பரப்பியது என பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்ட ஜாங் ஜான்யை சமீபத்தில் அவரது வழக்கறிஞர் ஜாங் கேகே சந்தித்துள்ளார். அவரின் மூலமே ஜாங் ஜான் சிறையில் அனுபவம் சித்தரவதை தற்போது உலகிற்கு தெரிந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் சி.பி.எஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஜாங் ஜான் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தன் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்துவதாக கூறியுள்ளார். நீண்ட பைஜாம உடை அணிந்திருந்தார், ஒரு கை முன் பக்கமும், இன்னொரு கை பின் பக்கமும் கட்டப்பட்டு இருந்தது, உணவு உண்ண மறுத்துவிட்டதால் சிறை அதிகாரிகள் வலுகட்டயமாக உணவு குழாயாய் பொறுத்தியுள்ளனர்.

அவரை கட்டிப்போட்டு குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடுமையான தலைவலி, மயக்கம், வயிற்று வலி இருப்பதாக கூறியுள்ளார். உணவு குழாய் பொறுத்தப்படுவதால், தொண்டை பகுதியில் புண் ஏற்பட்டுள்ளது.

ஜாங் கேகே கேட்டுக்கொண்ட பின்பும் உண்ணாவிரதத்தை கைவிட ஜாங் ஜான் மறுத்துவிட்டார்.

இந் நிலையிலேயே அவரது மேன் முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று ஷாங்காய் நீதிமன்றுக்கு வந்துள்ளது.