சீன பாதுகாப்பு மந்திரி- ரஸ்ய அதிபர் புடின் சந்திப்பு

0
156

சீன பாதுகாப்பு மந்திரி லி ஷாங்பூ ரஷியாவிற்கு பயணம் மேற்கொண்டு ரஷிய அதிபர் புடினை மொஸ்கோ நகரில் சந்தித்து பேசியுள்ளார்.

அவரை வரவேற்ற புடின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பில்இ ரஷியாவின் பாதுகாப்புத் துறை மந்திரியான செர்கெய் சொய்குவும் கலந்துகொண்டார்.

சீன பாதுகாப்பு மந்திரியுடனான சந்திப்பு தொடர்பில் குறிப்பிட்ட அதிபர் புடின், இரு நாடுகளிடையே பொருளாதார, சமூக, கலாசார மற்றும் கல்விப் பிரிவுகள், இராணுவம் என அனைத்து துறைகளிலும் நட்புறவு சிறந்த முறையில் வளர்ச்சி கண்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.