சுகாதார ஊழியர்களுடன் இரா.சாணக்கியன் கலந்துரையாடல்

0
464

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பணிபுரிந்து பணிபுரியும், தாதியர்கள், சுகாதார ஊத்தியோகஸ்த்தர்கள் இதன்போது பதாகைகளை எந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்தனர்.

விசேட விடுமுறை நாளில் கடமைக்கு சமூகமளிக்கும் ஊழியர்களுக்கு விடுமுறை நாள் கொடுப்பனவு வழங்குதல், கொவிட் -19 தடுப்பு செயற்திட்டத்தை வலுப்படுத்துவதற்காக சுகாதாரச் சேவை பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் தொழிற்ச் சங்க குழுவொன்று நியமித்தல் மற்றும் தீர்மானங்கள் எடுப்பதற்கு அவசியமாகும் போது அதற்கு சுகாதாரச் செயலாளரின் ஒத்துழைப்பினை வழங்குதல், உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிது கொண்டார்.

இதேவேளை, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இராணுவத்தினரை பயன்படுத்துகின்றமை தொடர்பில் இரா சாணக்கியன் கருத்து வெளியிட்டுள்ளார்.