நாட்டில் தற்போது அடையாளம் காணப்படுகின்ற கொவிட் நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் திரிபை உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாளாந்தம் 800க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலை மிக ஆபத்தானது.
தாங்கள் செல்கின்ற பிரதேசங்களில் குறைந்தபட்சம் ஒருவரேனும் கொவிட் நோய் தொற்றுடன் இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.
நாட்டில் தற்போது குணகுறிகள் அற்ற அதிகளவான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
அவர்களில் அதிகமானவர்கள் ஒமைக்ரோன் திரிபுடையவர்கள்.
மேலும் அவர்களில் டெல்டா திரிபையும் கொண்டவர்கள் இருக்கக்கூடும் என்பதை மறக்கக்கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.