சுமந்திரன் வந்ததில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிதைப்பு: கோவிந்தன் கருணாகரன்

0
350

இரா.சம்மந்தன் ஐயாவுக்காக வழக்கில் வாதாடுவதற்காக ஒரு சட்டத்தரணியாக வந்த எம்.ஏ.சுமந்திரனுக்கு, இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை இல்லாமல் செய்யும் அளவுக்கு சம்மந்தன் ஐயா அதிகாரம் கொடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் குற்றம் சாட்டியுள்ளார். வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.