சுயதொழில்,வாழ்வாதாரம், கடன் உதவியாக
26 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கல்

0
153

புதிய காத்தான்குடி பத்ரியா ஜூம்மா பள்ளிவாயல் பாலமுனை ஜாமிஉள் ஹசனாத் ஜூம் பள்ளிவாயல். காங்கேயனோடை ஈரான் சிட்டி மஸ்ஜிதுர்
ரசூல் ஆகிய பள்ளிவாயல்களில் இந்த ஸகாத் உதவி வழங்கும் வைபவங்கள் இடம் பெற்றன.

இதன்போது சுயதொழில்,வாழ்வாதாரம் மற்றும் கடன் உதவியாக 26 பயனாளிகளுக்கு ஸகாத் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பைத்துஸ் ஸகாரத் அமைப்பின் தலைவர் மௌலவி எம்.ஐ அப்துல் கபூர் மதனி தலைமையில் நடைபெற்ற இந்த ஸகாத் உதவி வழங்கும் வைபவத்தில் கூட்டு ஸகாத் அமைப்பின் செயலாளர் மௌலவி எம்.சபாஹிர் கூட்டு ஸகாத் அமைப்பின் நிர்வாகிகள் சம்மேளன முக்கியஸ்தர்கள் பள்ளிவாயல்களில் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்