சுரங்கப்பாதையில் 12 நாட்களாக சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டம்!

0
95
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் 12 நாட்களாக சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்குண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. தொழிலாளர்களை மீட்பதற்காக சுரங்கப்பாதையில் துளையிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டதும், அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்காக நோயாளர் காவு வண்டிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் மீட்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.