பின்னவல யானைகள் சரணாலயம் இப்போது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. பின்னவல யானைகள் சரணாலயத்தில் 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதி உலகில் முதல் தடவையாக இரட்டை யானைகள் பிறந்தன.தற்போது இந்த யானைகளைப் பார்வையிடுவதற்குச் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் பின்னவலவுக்கு வருகை தருகின்றனர்.
இரட்டை யானைகளான சஜனா, திசா ஆகிய இரட்டை யானைகள் ஆரோக்கியமுடைய இளம் குட்டிகளாகக் கூட்டத்துடன் மகிழ்ச்சியாகச் சுற்றித்திரிகின்றன.அவற்றின் இருப்பு உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகளின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்க்கிறது. இது யானை பாதுகாப்பிலும் இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதிலும் பின்னவலவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.