பிரான்சுக்கு வருகை தந்த சுலோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக் , கடந்த பிப்ரவரி 3-ம் தேதி அதிபர் மேக்ரானை சந்திக்க எலிசி அரண்மனைக்கு வந்தார்.
இகோர் மாடோவிக்கை மேக்ரான் வரவேற்றதை அடுத்து இருவரும் அரண்மனைக்கு வெளியே செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர். இருவரும் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது மழை பெய்யத்தொடங்கியது. உடனே பெண் உதவியாளர் ஒருவர் வந்து பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு ஒரு கருப்பு குடையை வழங்கினார். மேக்ரான் அதை சுலோவாக்கிய பிரதமருக்கு பிடித்தார்.
இரண்டாவது பெண் உதவியாளர் வந்து மேக்ரானுக்கான குடையை முதலில் வந்த பெண் உதவியாளரிடம் கொடுத்தார். அவர் அதை மேக்ரானுக்கு பிடித்தார். இரண்டாவது பெண் உதவியாளர் மேக்ரான் பிடித்திருந்த குடையை வாங்க முன்வந்தார் ஆனால் அவசியம் இல்லை என்று அவரிடம் மேக்ரான் சைகை காட்டினார்.
இரண்டு பேரும் செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு, எலிசி அரண்மனைக்குள் செல்ல திரும்பியபோது ஒரு இராணுவ உதவியாளர் அணுகி மேக்ரானிடம் குடையை வாங்க முன்வந்தார். மேக்ரான் அவரிடமும் குடையை வழங்காமல் தொடர்ந்து இகோர் மாடோவிக்கு தானே குடை பிடித்தார்.