சுவருக்கு நிறப் பூச்சு பூசிக் கொண்டிருந்தவர் தவறி கீழே வீழ்ந்து உயிரிழப்பு

0
101

இரண்டு மாடி வீட்டொன்றில் சுவருக்கு நிற பூச்சு பூசிக் கொண்டிருந்த நபர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். 

சுமார்  20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த நபரை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளார் . 

மீகொட பகுதியில் வசிக்கும்  64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் . 

குறித்த நபர் மற்றுமொரு உதவியாளருடன் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வீட்டில்  சுவரில்  நிற பூச்சு பூசும் போதே அவர் தவறி கீழே விழுந்துள்ளார் .