தேசிய தொற்று நோயியல் சிகிச்சை பிரிவுக்கு வரும் சுவாச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றமே தொற்று நோய்கள் அதிகரிப்பதற்கு காரணம். இதனால் பலருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் காணப்படுகின்றது. உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், இது ஒருவரிடம் இருந்து மற்றையவருக்கு தொற்றும்.
இதன்காரணமாக சளி, இருமல் மற்றும் தும்மல் என்பன காணப்பட்டால் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களை கோருகின்றோம். எனவே, தொற்று நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்துகொள்வதற்கான வழிகாட்டுதல்களை மக்கள் உரிய வகையில் பின்பற்ற வேண்டும்- என்றும் அவர் கூறினார்.