சுவிஸ் உதயம் அமைப்பால், பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்திற்கு உதவி

0
225

கிழக்கு மாகாணத்தில் கல்விப்பணி மற்றும் வாழ்வாதார உதவிகளை முன்னெடுத்து வரும் சுவிஸ் உதயம் அமைப்பின் ஊடாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வு இன்று கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டன. பாடசாலையின் அதிபர் கே.தியாகராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் மு.விமலநாதன்,செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன்,உபதலைவர் கண.வரதராஜன்,உபசெயலாளர் நடனசபேசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பாடசாலையில் உள்ள பல்வேறு குறைபாடுகளும் சுவிஸ் உதயம் அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவற்றைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும், சுவிஸ் உதயம் அமைப்பினர் தெரிவித்தனர்.