சூரிய சக்தியில் இயங்கும் பயணிகள் போக்குவரத்து படகு சேவை ஆரம்பம்!

0
126

பத்தரமுல்லை – ஹீனட்டிகும்புர பகுதியிலிருந்து வெள்ளவத்தை வரை சூரிய சக்தியில் இயங்கும் பயணிகள் போக்குவரத்து படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சூரிய சக்தியில் இயங்கும் படகு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் சுற்றுலாத்தளங்களில் இவ்வாறான படகு சேவை திட்டத்தை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறினார்.