சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் சிரமதான பணியும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனியும் மட்டக்களப்பு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைக்கு அமைய ஐக்கிய நாடு சபையின் அங்கீகாரத்துடன் 1972 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. மட்டகளப்பு எகெட் கரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் சிவலிங்கம் தலைமையில்,
மட்டக்களப்பு மாநகர சபை முன்றலிருந்து, மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் திண்ம கழிவுகளை அகற்றும் விழிப்புணர்வு சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
இதொனொரு அங்கமாக, எகெட் கரிதாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்பணி நிக்சன் அடிகளாரின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில், புனித மரியாள் பேராலயத்தில் மரநடுகை இடம்பெற்றது.
அத்தோடு காந்திபூங்காவில், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் சிவலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான , கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவு கட்டளை அதிகாரி சந்திம குமாரசிங்க, மட்டக்களப்பு விமானப்படை குரூப் கெப்டன் சரத் பண்டார, செங்கலடி மறைக் கோட்ட குரு முதல்வர் அருட்பணி தேவதாசன் அடிகளார், மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன தலைவர் செல்வராசா மற்றும் சர்வ மத தலைவர்கள் அருட் சகோதரிகள், அருள் தந்தையர்கள், அருட் சகோதரர்கள் , சாரணர் மாணவர்கள், கிராம மட்ட சர்வ மத குருக்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.