என்றும் சிவானந்தியன் எனும் பெயரில் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையின் 2015 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டிலும் நிதி அணுசரணையிலும் வறுமையின் கீழ் வாழும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று காலை முதல் வழங்கப்பட்டன.

மயிலவெட்டுவான் பகுதியில் ஆகக்கூடிய மாத வருமானமாக 6000 ரூபாய் பெறும் குடும்பங்களுக்கே இந்த உலர்
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் மயிலவெட்டுவான் 60 குடும்பங்களுக்கும் கல்லடி, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, களுவங்கேணி பகுதியில் மொத்தமான 100 குடும்பங்களுக்கு தலா 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்;கப்பட்டன.

2015 ஆண்டு சிவானந்த பாடசாலை உயர்தர மணாவர்களின் சொந்த நிதியில் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியில் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
இதன்போது என்றும் சிவானந்தியன் குழாத்தினர் மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
