சிறுவர்கள் மத்தியில் அறநெறி கல்வியினைப் கற்பிப்பதன் மூலம் ஒழுக்கமான சமூதாயத்தை உறுவாக்கும் நோக்கில் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய நிருவாக சபையின் நிதியுதவியினால் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுக்குப் பொத்தானை கிராமத்தில் அறநெறிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலுக்குப்பொத்தானை கிராம மக்கள் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய நிருவகாகத்தினரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது இடிந்த நிலையில் காணப்பட்ட கட்டடம் சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
கடந்த மாதம் அமரத்துவமடைந்த லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய நிருவாக சபைன் உறுப்பினர் யாழ்ப்பாணம் இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த அறுமுகம் கந்தையா விவேகானந்தன் அவர்களின் நினைவாக அறநெறிப் பாடசாலை திறந்துவைக்கப்பட்டது
லண்டனை ஈழபதீஸ்வரர் ஆலய நிருபாக சபையின் உதவித் திட்டத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நாகராஜா ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்இ லண்டனை ஈழபதீஸ்வரர் ஆலய நிருபாக சபை உறுப்பினர் எஸ்.விக்கினேஸ்வரன்இ உதவித் திட்டத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் லோகநாதன் அனோஜன் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்து மீள்குடியேறிய இலுக்குப்பொத்தானை கிராம மக்களின் குடி நீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டு பொதுக் கிணறுகளும் லண்டனை ஈழபதீஸ்வரர் ஆலய நிருபாக சபையின் நிதியுதவி மூலம் அமைக்கப்பட்டுள்ளது.குறித்த கிராமத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் நோயினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து பாதுகாப்பற்ற குடிசை வீட்டில் வாழ்ந்துவந்த இரண்டு குடும்பங்கள் தொடர்பாக லண்டனை ஈழபதீஸ்வரர் ஆலய நிருபாக சபைக்கு முன்வைத்த கோரிக்கை;ககு அமைவாக வீடுகள் கட்டுவதற்காக நிதி வழங்கப்ப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வின்போது ஐந்து துவிச்சக்கரவண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.